பதிவு செய்த நாள்
04 பிப்2012
00:14

மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக் கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது.அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரிப்பு மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் போன்றவையும், இந்திய பங்குச் சந்தைகளுக்கு வலு சேர்ப்பதாக இருந்தது. செலாவணி வரத்து அதிகரித்ததை அடுத்து, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, 48.69ஆக உயர்ந்தது.நேற்று நடை பெற்ற பங்கு வியா பாரத்தில், தொலைத்தொடர்பு, வங்கி, பொறியியல், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை உயர்ந்திருந்தது. இருப்பினும், லண்டன் உலோகச் சந்தையில், பல்வேறு உலோகங்களின் விலை குறைந்ததை அடுத்து, உலோக நிறுவன பங்குகளுக்கு தேவைப்பாடு குறைந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது 173.11 புள்ளிகள் அதிகரித்து, 17,604.96 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,630.53 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,382.70 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 24 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 6 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 55.95 புள்ளிகள் உயர்ந்து, 5,325.85 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,334.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,255.55 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|