பதிவு செய்த நாள்
04 பிப்2012
16:50

பி-மேக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மினி எம்பிவி கார் 5 பேர் பயணம் செய்ய முடியும். புதிய குளோபல் ஃபியஸ்ட்டா பிளாட்பார்மில்தான் இந்த புதிய மினி எம்பிவியும் வடிவைக்கப்பட்டுள்ளது. பி-மேக்ஸ் எம்பிவி பல புதிய நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கும். தவிர, பக்கவாட்டு கதவுகளுக்கு இடையில், சென்டர் பில்லர் இல்லாமல் இருக்கும் வகையில், இதன் கான்செப்ட் மாடல் உள்ளது. அதிக இடவசதி, தரம் என அனைத்து அம்சங்களிலும் குறைவில்லாத ஓர் காராக இது மார்க்கெட்டுக்கு வர இருக்கிறது. ஃபோர்டு ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் 8 புதிய மாடல்களில் பி-மேக்ஸ் மினி எம்பிவியும் ஒன்றாக இருக்கும். 4.04 மீட்டர் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மினி எம்பிவி, 1.0 லிட்டர் ஈக்கோ பூஸ்ட் எஞ்சினை கொண்டிருக்கும். தவிர, 1.5 லிட்டர் டியுராடார்க் டீசல் எஞ்சின் மாடலிலும் கிடைக்கும்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|