பதிவு செய்த நாள்
07 பிப்2012
00:25

புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த பீ.எச்.இ.எல். நிறுவனம், அதிக திறன் கொண்ட நவீன 1,200 கிலோ வாட் அல்ட்ரா டிரான்ஸ்பார்மரை , மத்திய பிரதேசத்தில், பினா என்ற இடத்தில் உள்ள சோதனை மையத்தில் நிறுவியுள்ளது.
இது, அல்ட்ரா ஹை வோல்டேஜ் ஆல்டர்நேட்டிவ் கரன்ட் (யு.எச்.வி.ஏ.சி) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய, இந்தியாவின் முதல் டிரான்ஸ்பார்மர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்புதிய டிரான்ஸ்பார்மர் தற்போதைய சுற்றுச் சூழலுக்கு ஏற்பவும், கடுமையான விதிமுறைகளின்படியும், கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வந்தது. அதிக மின் அழுத்தத்தை மிகச் சீரான முறையில், விநியோகிக்கக்கூடிய இவ்வகை டிரான்ஸ்பார்மர்கள், சில நாடுகளில் மட்டுமே உள்ளன. இந்தப் பட்டியலில், தற்போது இந்தியா இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பீ.எச்.இ.எல். நிறுவனம் மின் துறைக்கு தேவையான, ரியாக்டர்ஸ், கெப்பாஸிட்டர்ஸ், அதிக திறன் கொண்ட சர்க்யூட் பிரேக்கர்ஸ், ஸ்விட்கியர் உள்ளிட்ட சாதனங்களை தயாரித்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|