பதிவு செய்த நாள்
07 பிப்2012
00:26

புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (பி.எப்.சி), வரும் 2012-13ம் நிதியாண்டில், 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது என, இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சத்னம் சிங் தெரிவித்தார்.
இந்நிறுவனம், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், தற்போதைய நிலவரப்படி, 28 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், இந்நிறுவனம், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு, 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி உதவி வழங்க, இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், 25 ஆயிரத்து 400 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில், நிறுவனத்தின் கடன் இலக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்படும் என சிங் மேலும் தெரிவித்தார்.
பி.எப்.சி. நிறுவனம், அனல் மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும், பொதுத் துறையைச் சேர்ந்த, என்.டி.பி.சி. நிறுவனத்திற்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கும் வகையில், கடந்த 2008-09ம் நிதியாண்டில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. இது வரையில், 8 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி உதவி அளிக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள தொகை, நடப்பு நிதியாண்டிற்குள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|