பதிவு செய்த நாள்
07 பிப்2012
00:26

புதுடில்லி : நடப்பாண்டு, ஜனவரி மாதத்தில், இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 6 லட்சத்து 81 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது, சென்ற 2011ம் ஆண்டின் இதே மாதத்தில் இந்தியாவிற்கு வந்தவர்களை விட, 9.2 சதவீதம் (6 லட்சத்து 24 ஆயிரம் பேர்) அதிகமாகும். இந்தியா வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, கடந்த 2010ம் ஆண்டின் ஜனவரியில், இதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில், 5.2 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5 லட்சத்து 69 ஆயிரமாக இருந்தது.
சென்ற ஜனவரி மாதம், அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் மூலம், ரூபாய் மதிப்பில் கிடைத்த வருவாய், 49.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5,777 கோடி ரூபாயிலிருந்து, 8,623 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 2010ம் ஆண்டின் இதே மாதத்தில், 5,593 கோடி ரூபாயாக இருந்தது. மதிப்பீட்டு காலத்தில், டாலர் மதிப்பின் அடிப்படையில் கிடைத்த வருவாய், 32.1 சதவீதம் வளர்ச்சியடைந்து, 127.3 கோடி டாலரிலிருந்து, 168.1 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, 2010ம் ஆண்டில், 121.5 கோடி டாலராக இருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|