பதிவு செய்த நாள்
07 பிப்2012
00:27

புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, 36,894 கோடி ரூபாய் மானியம் வழங்குமாறு, ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா மற்றும் கெயில் இந்தியா நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள், அடக்க விலைக்கும் குறைவாக டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றை வழங்குகின்றன. இதனால், இந்நிறுவனங்களுக்கு நடப்பு நிதியாண்டின், கடந்த டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் 97 ஆயிரத்து 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில், 37.91 சதவீதத்தை (36 ஆயிரத்து 894 கோடி ரூபாய்) உள்நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா, கெயில் இந்தியா ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் மானியமாக வழங்குமாறு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் - டிசம்பர் வரைக்குமான இந்த மானியத் தொகையில், ஓ.என்.ஜி.சி., அதன் பங்காக 30 ஆயிரத்து 296 கோடி ரூபாயை வழங்கும். இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தைவிட 42.3 சதவீதம் அதிகமாகும்.
இதே காலத்திற்கு, ஆயில் இந்தியா நிறுவனம், 4.478 கோடி ரூபாய் (1,597 கோடி ரூபாய்) மானியமாக வழங்கும்.
கெயில் இந்தியா நிறுவனத்தின் மானியப் பங்களிப்பு, 2.120 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை, மத்திய அரசு, சென்ற ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான ஆறுமாத காலத்திற்கு, மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக வழங்கியுள்ளது. மூன்றாவது காலாண்டிற்கான மானியம், இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|