பதிவு செய்த நாள்
07 பிப்2012
00:29

நாமக்கல் : நாமக்கல் மண்டலத்தில், 800 கோழிப்பண்ணைகள் அமைந்துள்ளன. அதன் மூலம் நாள்தோறும், மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், சத்துணவு திட்டம், கேரள மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
கோழிப்பண்ணைகளில், முட்டை உற்பத்திக்காக, 16 முதல், 18 வார வயதுடைய கோழிகள் விடப்படுகின்றன. அந்தக் கோழிகள் தொடர்ந்து ஒன்றரை ஆண்டு வரை முட்டைகளை உற்பத்தி செய்கின்றன. ஒரு கோழி சராசரியாக, 320 முட்டைகள் இடுகிறது. ஒன்றரை ஆண்டுக்கு பின், கோழிகள் இடும் முட்டைகளின் எண்ணிக்கை குறைகிறது.
எனவே, அவை இறைச்சிக்கு அனுப்பப்படுகின்றன. குறிப்பாக, முட்டைக் கோழிகள், கேரளாவுக்கு அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. முட்டைக் கோழி இறைச்சி அடர்த்தியாக இருப்பதால், பிரியாணி உணவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதனால், இந்த இறைச்சியின் விலை உச்சத்தில் இருக்கும்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 18ம் தேதி முதல், முட்டைக் கோழி இறைச்சி விலை, சரிவடைந்து வருகிறது. 46 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ முட்டைக் கோழி, பிப்ரவரி 2ம் தேதி நிலவரப்படி, 29 ரூபாயாக சரிவடைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு, கோழிப் பண்ணைத் துறையினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தலைவர் (நாமக்கல் மண்டலம்) செல்வராஜ் கூறுகையில், ""முட்டை யின் விலை குறைந்து வருகிறது. அதனால், பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் காரணமாக முட்டைக் கோழியின் விலை சரிந்து வருகிறது,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|