பதிவு செய்த நாள்
08 பிப்2012
01:57

புதுடில்லி:வரும், 2012-13ம் நிதி யாண்டில், நாட்டின் இயற்கை ரப்பர் பயன்பாடு 4 சதவீதம் அதிகரித்து 10.06 லட்Œம் டன்னாக உயரும் என , ரப்பர் வாரியம் மதிப்பிட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், இயற்கை ரப்பர் உற்பத்தி, 9.02 லட்சம் டன்னாகவும், பயன்பாடு, 9.66 லட்சம் டன்னாகவும், பற்றாக்குறை, 64 ஆயிரம் டன்னாகவும் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, 2012-13ம் நிதியாண்டில் முறையே, 4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 9.42 லட்சம் டன்னாகவும், 10.06 லட்சம் டன்னாகவும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டில், இவற்றின் இறக்குமதி,1 லட்சத்து, 70 ஆயிரம் டன்னாகவும், ஏற்றுமதி, 30 ஆயிரம் டன்னாகவும் இருக்கும்.சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், ரப்பர் பயன்பாடு குறையத் தொடங் கியுள்ளது. நடப்பாண்டு அக்டோபருக்கு பின் தான், இயல்பு நிலை திரும்ப வாய்ப்புள்ளதாக ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|