பதிவு செய்த நாள்
08 பிப்2012
01:59

புதுடில்லி:நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவாக, 6.9 சதவீதமாக குறையும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் மதிப்பிட்டுள்ளது. இது, கடந்த 2010-11ம் நிதியாண்டில், 8.4 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.
பொறியியல், வேளாண், சுரங்கம் போன்ற துறைகளின் உற்பத்தி வளர்ச்சி சரிவடைந்து போயுள்ளதே, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டீ.பி) குறைவிற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது, கடந்த நிதியாண்டில், 7 சதவீதமாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதே ஆண்டுகளில், நாட்டின் பொறியியல் துறை வளர்ச்சி 7.6 சதவீதம் என்ற அளவிலிருந்து, 3.9 சதவீதமாக சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது தவிர, சுரங்கத் துறை வளர்ச்சி 5 சதவீதத்திலிருந்து, -2.2 சதவீதமாகவும், கட்டுமான துறை வளர்ச்சி, 8 சதவீதத்திலிருந்து, 4.8 சதவீதமாகவும் குறையும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டில் நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட் மற்றும் வர்த்தக சேவை துறைகளின் வளர்ச்சி 9.1 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டில் 10.4 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது.எனினும் மின்சாரம், குடிநீர் மற்றும் எரிவாயு போன்ற துறைகளின் வளர்ச்சி 8.3 சதவீதமாக உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.இது, கடந்த நிதியாண்டில் 3 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.
மேலும், ஓட்டல், போக்குவரத்து, தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி 11.1 சதவீதத்திலிருந்து, 11.2 சதவீதமாகவும், சமூகம் சார்ந்த மற்றும் தனிநபர் சேவை வளர்ச்சி 4.5 சதவீதத்திலிருந்து, 5.9 சதவீதமாகவும் உயரும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி, கடந்த மாதம் வெளியிட்ட அதன் காலாண்டு நிதி ஆய்வுக் கொள்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என மறுமதிப்பீடு செய்திருந்தது. ஆனால், அதை விட குறைவாக, மத்திய புள்ளியல் அலுவலக மதிப்பீடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|