பதிவு செய்த நாள்
08 பிப்2012
02:00

சேலம்:தமிழகத்தில், சேலம் உள்ளிட்ட பகுதிகளில், "அபார்ட்மென்ட் ஸ்டாண்ட்' விற்பனை சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், துணிகளை காய வைப்பதற்கு திணறுகின்றனர். வீட்டினுள்ளேயே பலர் கம்பிகளை கட்டி துணிகளை காய வைக்கின்றனர். சிலர், மொட்டை மாடி ஏறி துணிகளை காய போடுகின்றனர். மழைக் காலத்தில் இவர்கள் துணிகளை காய போடுவதில் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையை மாற்ற, "அபார்ட்மென்ட் ஸ்டாண்ட்' என பெயரிடப்பட்ட அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ள புதிய ரகம் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. ஆதித்யா பிர்லா நிறுவனத்தார், இந்த ஸ்டாண்டை உருவாக்கியுள்ளனர். "அபார்ட்மென்ட்' வீடுகளில் வசிப்போர், தங்கள் வீட்டு பால்கனியில் இந்த ஸ்டாண்டை வைத்து விடலாம்.அதில், சேலைகள், பேன்ட், சர்ட் மற்றும் உள்ளாடைகள், துண்டு, கர்சிப் போன்றவை மாட்டும் வகையில் இந்த ஸ்டாண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டாண்டை தூக்கி செல்வதும் சுலபமாக உள்ளது. துணிகளை எடுத்த பிறகு, ஸ்டாண்டை மடக்கி சுவர் ஓரத்தில் வைத்து விட முடியும். இவைகளின் விலை 1,850 முதல், 2,600 ரூபாய் வரை உள்ளது.இந்த "அபார்ட்மென்ட் ஸ்டாண்ட்'கள் சேலம், செவ்வாய்ப்பேட்டை, காந்திரோடு, குகை ஆகிய பகுதிகளில் கிடைக்கின்றன.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|