பதிவு செய்த நாள்
08 பிப்2012
02:07

மும்பை:தொடர்ந்து ஐந்து வர்த்தக தினங்களாக ஏற்றம் கண்டு வந்த நாட்டின் பங்கு வியாபாரம், செவ்வாய்க்கிழமையன்று சரிவைக் கண்டது. நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.9 சதவீதமாக குறையும் என்ற மதிப்பீடு, பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.உள்நாட்டில் விமான போக்குவரத்து நிறுவனங்கள், விமான எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, இத்துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், பொறியியல், ரியல் எஸ்டேட், எரிசக்தி, உலோகம், தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, சரிவடைந்திருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 84.86 புள்ளிகள் சரிவடைந்து, 17,622.45 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,832.04 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,582.49 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 22 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 8 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும் காணப்பட்டது.
தேசியப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 26.50 புள்ளிகள் குறைந்து, 5,335.15 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,413.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,322.95 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|