பதிவு செய்த நாள்
08 பிப்2012
13:20

புதுடில்லி: யுனிநார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இதுகுறித்து நார்வே தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரிக்மோர், மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கபில் சிபலை சந்தித்து பேசியுள்ளார்.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட 122 உரிமங்களை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டது. இதில், யுனிநார் நிறுவனத்தின் 22 உரிமங்களும் அடக்கம்.யுனிநார் நிறுவனம், நார்வேயின் டெலிநார் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையை வழங்குவதற்காக இந்த நிறுவனம், 14 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. தற்போது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவால், இந்த முதலீட்டுக்கு ஆபத்து வந்துள்ளது. இந்த விவகாரத்தை சுமுகமாக பேசி தீர்ப்பதற்காக நார்வே தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரிக்மோர் அசருத், இந்தியா வந்துள்ளார்.
இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கபில் சிபலை சந்தித்து ரிக்மோர் பேசினார். யுனிநார் நிறுவனத்தின் முதலீட்டுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு உதவும்படி, கபில் சிபலிடம், ரிக்மோர் வலியுறுத்தியதாக தெரிகிறது.சந்திப்புக்கு பின், ரிக்மோர் கூறுகையில், ""கபில் சிபலுடனான பேச்சு, திருப்தியளிக்கும் வகையிலும், ஆரோக்கியமானதாகவும் இருந்தது. யுனிநார் விவகாரத்துடன், மேலும் சில விஷயங்கள் குறித்தும் பேசினோம்,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|