பதிவு செய்த நாள்
10 பிப்2012
00:04
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பருத்தி சந்தையில் நான்கு வாரத்தில் ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி பகுதியில் விவசாயிகள் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பருத்தி அறுவடை சீசன் துவங்கியுள்ளதால், கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தின் பருத்தி வார சந்தை கடந்த மாதம் 11ம் தேதி துவங்கியது.இந்தச் சந்தைக்கு கள்ளக்குறிச்சி, நாகலூர், கொங்கராயப்பாளையம், பொற்படாக்குறிச்சி, வடபொன்பரப்பி மற்றும் கடலூர் மாவட்டம் சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 5,000 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஒரு குவிண்டால் பருத்தி 4,129 - 3,665 ரூபாய் வரை விற்பனையானது. பருத்தி சந்தை துவங்கி நான்கு வாரங்களில் 1,172 விவசாயிகளிடம் இருந்து 11 ஆயிரம் பருத்தி மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான பருத்தி, சந்தையில் விற்பனையாகி உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|