பதிவு செய்த நாள்
10 பிப்2012
00:05

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், நாட்டின் மறைமுக வரி வசூல், 3 லட்சத்து 17 ஆயிரத்து 233 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் வசூலிக்கப்பட்டதை விட, 15.10 சதவீதம் (2 லட்சத்து 75 ஆயிரத்து 507 கோடி ரூபாய்) அதிகம் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், சுங்க வரி வசூல், 12.70 சதவீதம் வளர்ச்சிகண்டு, 1 லட்சத்து 10 ஆயிரத்து 109 கோடியிலிருந்து, 1 லட்சத்து 24 ஆயிரத்து 63 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. உற்பத்தி வரி வசூல், 6.80 சதவீதம் வளர்ச்சியடைந்து, 1 லட்சத்து 10 ஆயிரத்து 277 கோடியிலிருந்து, 1 லட்சத்து 17 ஆயிரத்து 730 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.சேவை வரி வசூல், 36.90 சதவீதம் அதிகரித்து, 55 ஆயிரத்து 121 கோடியிலிருந்து, 75 ஆயிரத்து 440 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|