பதிவு செய்த நாள்
10 பிப்2012
00:08

மேட்டூர்,: பிஸ்கட் தயாரிப்பிற்கு பயன்படும் பல்வேறு மூலப்பொருட்களில் ஒன்றாக அவரை விதை உள்ளது. இதன் விலை வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.நங்கவள்ளி, தாரமங்கலம், அமரகுந்தி, சின்னப்பட்டி, ஆரூர்பட்டி சுற்றுப் பகுதியில் விவசாயிகள் ஆண்டுதோறும் அவரை சாகுபடி செய்வது வழக்கம். கடந்த ஆடி மாதம் சாகுபடி செய்த அவரை, மார்கழி, தை மாதம் அறுவடை செய்து, சந்தையில் விற்பனை செய்யப்படும். தற்போது அவரை சீசன் உச்சத்தில் உள்ளது.தாரமங்கலம் சந்தைக்கு வாரம், 10 டன் அவரை விதை விற்பனைக்கு வருகிறது. விதையை வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து வெளிமாநில பிஸ்கட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். கடந்தாண்டு அவரை உற்பத்தி அதிகமாக இருந்தது. அதற்கேற்ப தரமும் சிறப்பாக இருந்ததால் ஒரு கிலோ, 30 முதல் 33 ரூபாய் வரை விலை போனது.நடப்பாண்டு பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால், அவரை விதையில் சுருக்கம் விழுந்து தரம் குறைந்து விட்டது. அதற்கேற்ப உற்பத்தியும் குறைந்து விட்டது. தரம் குறைந்ததால், அவரை விதை கொள்முதல் விலை, 29 ரூபாயாக வீழ்ச்சியடைந்தது.கடந்தாண்டை விட, நடப்பாண்டு கொள்முதல் விலை கிலோவுக்கு, 4 ரூபாய் குறைந்ததால், அவரை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|