பதிவு செய்த நாள்
10 பிப்2012
00:08

புதுடில்லி: நாட்டில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி, 17 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, ஏற்றுமதி மேம்பாட்டு குழு தெரிவித்துள்ளது.
இந்தியாவில், 584 சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில், அனுமதி வழங்கப்பட்ட, 381 சிறப்பு பொருளாதார மண்டலங்களில், தற்போது, 148 மண்டலங்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், இம்மண்டலங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி, 2 லட்சத்து 60 ஆயிரத்து 973 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 17 சதவீதம் (2 லட்சத்து 23 ஆயிரத்து 132 கோடி ரூபாய்) அதிகம்.
சென்ற 2010-11ம் முழு நிதியாண்டில், இம்மண்டலங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி, 43.1 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3 லட்சத்து 15 ஆயிரத்து 868 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது.
சென்ற டிசம்பர் மாதம் வரையிலுமாக, சிறப்பு பொருளாதார மண்டலங்களில், 2 லட்சத்து 49 ஆயிரத்து 631 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 8 லட்சத்து 15 ஆயிரத்து 308 பேர் நேரடி வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.சென்ற நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த ஏற்றுமதியில், சிறப்பு பொருளாதார மண்டலங்களின் பங்களிப்பு, 34 சதவீதமாக உள்ளது.மத்திய அரசு, சிறப்பு பொருளாதார மண்டங்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது. எனினும், இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மாற்று வரி (மேட்) காரணமாக, முதலீடுகள் குறைந்துள்ளன. இந்த வரிச்சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ஏற்றுமதி மேம்பாட்டு குழு, மத்திய நிதியமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|