பதிவு செய்த நாள்
10 பிப்2012
00:10

புதுடில்லி: நாட்டின் ஏற்றுமதி, சென்ற ஜனவரி மாதத்தில், 10.1 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,540 கோடி டாலராக (1 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. நாட்டின் இறக்குமதியும், 20.3 சதவீதம் அதிகரித்து, 4,010 கோடி டாலராக (2 லட்சத்து 500 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது என, மத்திய வர்த்தகத் துறை செயலர் ராகுல் குல்லார் தெரிவித்தார்.ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்துள்ளதால், சென்ற ஜனவரி மாதத்தில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை,1,470 கோடி டாலராக (73 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய டிசம்பர் மாதத்தில், 1,280 கோடி டாலராக (64 ஆயிரம் கோடி ரூபாய்) இருந்தது.நடப்பு பிப்ரவரியில், இறக்குமதி குறைவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. அதனால், வர்த்தக பற்றாக்குறை, அடுத்த இரண்டு மாதங்களில் கட்டுக்குள் வரும் என, குல்லார் தெரிவித்தார்.ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாத காலத்தில், இந்தியாவின் ஏற்றுமதி 23.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 24 ஆயிரத்து 280 கோடி டாலராக (12 லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இதே காலத்தில், இறக்குமதி, 29.4 சதவீதம் அதிகரித்து, 39 ஆயிரத்து 150 கோடி டாலராக (19 லட்சத்து 57 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 29 ஆயிரத்து 500 கோடி டாலர் (14 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய்) முதல் 30 ஆயிரத்து 500 கோடி டாலர் (15 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்) வரையில் இருக்கும் என தெரிகிறது. நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 29 ஆயிரத்து 700 கோடி டாலரை எட்டும்பட்சத்தில் வர்த்தக பற்றாக்குறை 16 ஆயிரம் கோடி டாலராக (8 லட்சம் கோடி ரூபாய்) இருக்கும் என, ராகுல் குல்லார் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|