பதிவு செய்த நாள்
10 பிப்2012
00:11

ஆமதாபாத்: நடப்பாண்டில், நாட்டின் உருளைக் கிழங்கு உற்பத்தி, 3.70 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.உலகில், அளவின் அடிப்படையிலான காய்கறி உற்பத்தியில், இந்தியா மிகப்பெரிய நாடாக உள்ளது. இந்தியாவிலிருந்து, மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, உருளைக் கிழங்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.பஞ்சாப் மாநிலத்திலிருந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு உருளைக் கிழங்கு அதிகளவில் ஏற்றுமதி ஆகிறது. பாகிஸ்தான், சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளுக்கு 10-20 லட்சம் டன் அளவிற்கு உருளைக் கிழங்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.கடந்த சில மாதங்களாக, உருளைக் கிழங்கு உற்பத்தி அபரிமிதமாக உயர்ந்துள்ளது. இதனால் அதன் விலை குறைந்துள்ளது. உற்பத்தி செலவை விட, விற்பனை விலை குறைவாக இருப்பதால், உருளைக் கிழங்கு பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், நடப்பாண்டில், உருளைக் கிழங்கு உற்பத்தி, 3.70 கோடி டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|