பதிவு செய்த நாள்
10 பிப்2012
00:13

புதுடில்லி: இந்தியாவில், நடப்பு நிதியாண்டில், ஐ.டி. - பீ.பி.ஓ. துறையின் வருவாய், 10 ஆயிரம் கோடி டாலரை (5 லட்சம் கோடி ரூபாய்) தாண்டும் என, "நாஸ்காம்' அமைப்பு தெரிவித்துள்ளது.முன்னணிஉலக பொருளாதார நெருக்கடியால் பல நாடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையிலும், இந்தியாவின் ஐ.டி., துறை, நிலையான அளவில் வளர்ச்சியை கண்டு வருகிறது. உலகளவில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பி.பி.ஓ. (வெளியாரிடம் பணிகளை ஒப்படைத்து பெறுவது) துறையில், இந்தியா 58 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.நடப்பு 2011-12ம் நிதியாண்டில் இதுவரையிலுமாக, நாட்டின் தகவல் தொழில் நுட்பத் துறையின் ஏற்றுமதி 16.3 சதவீதமும், உள்நாட்டு வர்த்தகம் 16.7 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது.டாலர் மதிப்பு
நடப்பு முழு நிதியாண்டில், தகவல் தொழில்நுட்பத் துறையின் மொத்த வருவாய், 10 ஆயிரத்து 100 கோடி டாலராக (5 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், ஏற்றுமதி வாயிலாக 6,900 கோடி டாலரும் (3 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய்), உள்நாட்டு வர்த்தகம் மூலம், 3,200 கோடி டாலரும் (1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய்) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியால், ஏற்றுமதி வருவாய் நடப்பு முழு நிதியாண்டில், 11-14 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சிறிய நிறுவனங்கள்
இந்திய ஐ.டி. துறையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, சிறிய நிறுவனங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்து வருகிறது. இவை, அளவில் சிறியவையாக இருப்பினும், எண்ணிக்கையில் அதிகமாக உள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த தகவல் தொழில்நுட்பத் துறையில், இந்த சிறிய நிறுவனங்களின் பங்களிப்பு, 200 கோடி டாலர் (10 ஆயிரம் கோடி ரூபாய்) என்றளவில் உள்ளது.வேலை வா#ப்பு
ஐ.டி மற்றும் பீ.பி.ஓ. துறை, 27.70 லட்சம் பேருக்கு பணி வாய்ப்பை வழங்கி வருகிறது. நடப்பு நிதியாண்டில் இத்துறையில், 2 லட்சம் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
வரும் நிதியாண்டில், 1 லட்சத்திற்கும் குறைவான வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனினும், நடப்பு நிதியாண்டில் 10-14 சதவீத அளவிலான இத்துறையின் ஊதிய வளர்ச்சி, வரும் 2012-13ம் நிதியாண்டில், 8-10 சதவீதமாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.நிலையற்ற கொள்கை
இந்தியாவில், தகவல் தொழில்நுட்பத் துறை ஆண்டுதோறும், 13 சதவீத வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இதன் அடிப்படையில், வரும் 2020ம் ஆண்டில், இத்துறையின் மொத்த வருவாய், 22 ஆயிரத்து 500 கோடி டாலராக (11 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து நாஸ்காம் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, ""இந்தியாவில், தகவல் தொழில் நுட்பத்துறை சிறப்பாக வளர்ச்சியை கண்டு வரும் அதேநேரத்தில், நிலையான கொள்கை இல்லாதது கவலை அளிப்பதாக உள்ளது. நேரடி வரி, சரக்கு மற்றும் சேவை வரி, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகியவற்றில் உறுதியான கொள்கை இல்லை. வரி உயர்வு கவலை அளிக்கிறது. இவற்றிற்கெல்லாம் தீர்வு காணப்பட்டால், ஐ.டி. துறை மேலும் வளர்ச்சி காணும் வாய்ப்புள்ளது'
என்றார்.
முதலிடத்தில் இந்தியா
உலகில் பி.பீ.ஒ. துறையில், 58 சதவீத பங்களிப்புடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஐ.டி. - பீ.பி.ஓ. துறையில் 27.7 லட்சம் வல்லுனர்கள் உள்ளனர். நடப்பு நிதியாண்டில், 2.3 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|