பதிவு செய்த நாள்
10 பிப்2012
00:13

மும்பை,: நாட்டின் பங்கு வியாபாரம் வியாழக்கிழமையன்று சிறப்பாக இருந்தது. சர்வதேச நிலவரங்களாலும், லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதாலும், முந்தைய மூன்று நாட்களில் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.இந்நிலையில், நேற்று கிரீஸ் நாட்டு கடன் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் சூழல் உருவானதால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், உலோகம், வங்கி உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. எண்ணெய், எரிவாயு, பொறியியல், ஆரோக்கிய பராமரிப்பு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 123.43 புள்ளிகள் அதிகரித்து, 17,830.75 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,879.46 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,609.43 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 21 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 9 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசியப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 44.20 புள்ளிகள் உயர்ந்து, 5,412.35 புள்ளிகளில் நிலைகொண்டது. இது கடந்த ஆறு மாதங்களுக்கு பிறகு காணப்பட்ட உயர்வாகும். வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,423.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,338.90 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|