பதிவு செய்த நாள்
13 பிப்2012
12:32

கோபிசெட்டிபாளையம்:கோடை துவக்கம் காரணமாக கோபி மொடச்சூர் மாட்டு சந்தையில் மாடுகளில் விலை வீழ்ச்சியடைய துவங்கி உள்ளது.கோபி மொடச்சூரில் வாரந்தோறும் சனிக்கிழமை மாட்டு சந்தை நடக்கிறது. கோபி, சத்தி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஜெர்சி, கொங்கன் மற்றும் எருமை மாட்டில் முரா, நாட்டு கிராஸ் ஆகிய ரகங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. பல்வேறு பகுதி வியாபாரிகள் மாடு வாங்கி செல்கின்றனர்.தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கோடை வெயிலால் பல்வேறு பகுதிகளிலும் தீவனத்தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாட்டு தீவனங்களான புண்ணாக்கு, சோளம், கேழ்வரகு, புல் விலைகளும் உயர்ந்து வருகின்றன.
தீவனப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், நிலம் இல்லாமல் வீடுகளில் மாடு வளர்ப்பவர்கள் தீவனம் வாங்க முடியாமல் மாடுகளை விற்க துவங்கி உள்ளனர். நிலங்கள் வைத்துள்ளவர்கள் மட்டும் ஒரு சிலர் தங்கள் மாடுகளை பராமரிக்கின்றனர். கோடை நெருங்குவதால் மாடுகளின் விலை வீழ்ச்சியடைய துவங்கி உள்ளது.சென்ற வாரம் சந்தையில் ஜெர்சி இன மாடு, 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை, கன்று குட்டி பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை, இறைச்சி மாடு, பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் விற்கப்பட்டது. கலப்பின மாடு, 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய், கன்று குட்டி, 5,000 முதல் பத்தாயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது.கொங்கன் இன மாடு, 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை, கன்று குட்டி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை, இறைச்சி மாடு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை, எருமை மாடு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது.சென்ற சில வாரங்களுக்கு முன் மாடுகளில் விலை, 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. சென்ற வாரம் விலை சரிந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|