பதிவு செய்த நாள்
14 பிப்2012
10:19

தாம்பரம் : காதலர் தினத்தையொட்டி புறநகரில், ஒரு சிவப்பு ரோஜா 300 ரூபாய்க்கும், மஞ்சள் ரோஜா 250 ரூபாய்க்கும் விற்பனையானது. காதலர் தினத்திற்கு ரோஜா பூக்கள், பொம்மைகள், வாழ்த்து அட்டைகள் அதிக அளவில் விற்பனையாகும். இந்த ஆண்டு பொம்மைகள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன. தென்சென்னை புறநகரில் உள்ள மொத்தம் மற்றும் சில்லறை கடைகளில் வாலிபர்களும், இளம் பெண்களும், கூட்டம் கூட்டமாகச் சென்று பொம்மை, வாழ்த்து அட்டைகள் மற்றும் ரோஜா பூக்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். பொம்மைகள் 100 ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரையிலும், ஒரு சிவப்பு ரோஜா 300 ரூபாய்க்கும், மஞ்சள் ரோஜா 250 ரூபாய்க்கும், வாழ்த்து அட்டைகள் 50 ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரையிலும் விற்பனையாகின.தாம்பரத்தைச் சேர்ந்த வியாபாரி அன்தீப்குமார் ஜெயின் கூறுகையில்,"இந்த ஆண்டு தலையணை வடிவிலான பொம்மைகள் அதிக அளவில் விற்பனையாகின. சிவப்பு ரோஜா பூக்களை, வாலிபர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர்' என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|