பதிவு செய்த நாள்
14 பிப்2012
13:10

இந்தியாவில் கார் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுசூகி நிறுவனம், உள்நாட்டில் ஒரு கோடி கார்கள் விற்பனை என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.மத்திய அரசு மற்றும் ஜப்பானை சேர்ந்த சுசூகி நிறுவனம் இணைந்து, கடந்த 1983ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டு, மாருதி சுசூகி நிறுவனத்தை துவக்கின. இந்த நிறுவனத்தின் முதல் காரான மாருதி 800, அதே ஆண்டு டிசம்பரில் வெளி வந்தது. இந்த நிறுவனத்தின் 50 லட்சமாவது கார் என்ற சாதனை கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ்த்தப்பட்டது. துவக்கத்தில், மாருதி 800 கார் மற்றும் ஓம்னி காரே அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது. இதன் பிறகு கடந்த ஏழு ஆண்டுகளாக, இந்திய அளவில் அதிகம் விற்பனை செய்யப்படும் கார் என்ற பெருமையை ஆல்டோ பெற்றுள்ளது. இதுதவிர, மாருதி சுசூகி நிறுவனத்தின் வேகன்ஆர் ஸ்விஃப்ட் கார்களுக்கும், மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சூழ்நிலையில், உள்நாட்டில் ஒரு கோடி கார்கள் விற்பனை என்ற சாதனையை சில நாட்களுக்கு முன் மாருதி சுசூகி நிறுவனம் நிகழ்த்தியுள்ளது. மானேஸர் தொழிற்சாலையில் ஒரு கோடி காராக, சிவப்பு நிற ஸ்விஃப்ட் விஎக்ஸ்ஐ கார், கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|