பதிவு செய்த நாள்
14 பிப்2012
14:17

இந்தியாவில், அதிக கார்கள் விற்பன என்ற பெருமைக்கு உரியது, மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ கார். இதற்கு போட்டியாக, ஹுண்டாய் நிறுவனம் இயான் காரை, சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது.எனினும், ஆல்டோ கார் விற்பனையை, இயான் காரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. கடந்த ஆண்டு நவம்பரில் 24,422 கார்கள், டிசம்பரில் 24,113 கார்கள், இந்த ஆண்டு ஜனவரியில் 32,965 கார்கள் என, ஆல்டோ கார் விற்பனை காணப்படுகிறது. இந்த காலகட்டத்தில் இயான் கார் விற்பனையும் சொல்லிக் கொள்ளும் அளவில் உள்ளது. மூன்று மாதங்களில் முறையே, 7,418, 6,223, 7,344 கார்கள் என, இயான் கார்கள் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் ஆல்டோ கார் விற்பனையை, இயான் கார் விற்பனை பாதிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.அதே நேரத்தில் ஹுண்டாய் நிறுவனத்தின் மற்றொரு மாடல் காரான, சான்ட்ரோ ஜிங் காரை, இயான் கார் விற்பனையில் முந்தி வருவது தெரிய வந்துள்ளது. இயான் கார் அறிமுகத்துக்கு முன், மாதம் 7,000 சான்ட்ரோ ஜிங் கார்கள் விற்பனையாகி வந்தன. ஆனால், இது கடந்த ஆண்டு அக்டோபரில் 3,141 கார்களாக திடீரென குறைந்தது. இதன் பிறகு, 5,000 கார்களுக்கு குறைவாக தான், மூன்று மாதங்களாக விற்பனையாகி வருகிறது. இதன் மூலம், சான்ட்ரோ ஜிங் காருக்கான சந்தையை தான், இயான் கார் கைப்பற்றி வருவதாக, வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|