பதிவு செய்த நாள்
16 பிப்2012
02:55
சென்னை:பொது காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வரும், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின், பிரிமிய வருவாய், நடப்பு நிதியாண்டில், 8,000 கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த 2010-11ம் நிதியாண்டை விட, 25 சதவீதம் அதிகமாகும்.
இந்நிறுவனம், சென்ற டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், 414 கோடி ரூபாயை வரிக்கு பிந்தைய லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, 24 சதவீதம் அதிகமாகும். குறிப்பாக, சென்ற 2010-11ம் முழு நிதியாண்டில், ஈட்டப்பட்ட லாபத்தை விட மூன்று மடங்கு (131 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் வர்த்தகம் 27 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5,872 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், இந்நிறுவனத்தின் முதலீட்டு வருவாய் 1,106 கோடி ரூபாயாக உள்ளது.
இந்நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு, 4,660 கோடி ரூபாய் என்ற அளவில் சிறப்பாக உள்ளது.இந்நிறுவனம் மூன்றாவது காலாண்டில், தமிழகத்தில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 1.34 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் வகையில், தமிழக அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|