பொருளாதார மந்த நிலையால் உருக்கு பயன்பாட்டு வளர்ச்சியில்சரிவு பொருளாதார மந்த நிலையால் உருக்கு பயன்பாட்டு வளர்ச்சியில்சரிவு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு ...
நடப்பு நான்காவது காலாண்டில்... நாட்டின் தங்கம் இறக்குமதி220 டன்னாக குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2012
00:11

புதுடில்லி: நாட்டின் தங்கம் இறக்குமதி, நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், 220 டன்னாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் வங்கிகள் நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது.சென்ற 2010-11ம் நிதியாண்டின், இதே காலாண்டில் 286 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.தங்க பயன்பாடுசர்வதேச அளவில் தங்கம் விலை சரிவடைந்துள்ளது. மேலும், உள்நாட்டில், கடந்த தீபாவளி முதல் தங்கத்தின் பயன்பாடு குறைந்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு சென்ற மாதம், தங்கம் இறக்குமதிக்கு அதன் மதிப்பில் 2 சதவீத வரி விதித்துள்ளது. இதன் காரணமாகவும், தங்கத்தை இறக்குமதி செய்வது குறைந்துள்ளது. அது போன்று வெள்ளி இறக்குமதிக்கும், 6 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இவற்றின் விலை உள்நாட்டில் உயர்ந்துள்ளது.உலக அளவில், தங்கம் இறக்குமதியில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. சென்ற 2011ம் காலண்டர் ஆண்டில், செப்டம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், தங்கம் இறக்குமதி 21 சதவீதம் உயர்ந்து, 753 டன்னாக அதிகரித்துள்ளது. இறக்குமதிஎனினும், நான்காம் காலாண்டில் தங்கம் இறக்குமதி குறைந்துள்ளதால், சென்ற முழுஆண்டின் இறக்குமதி, முந்தைய ஆண்டை விட 8 சதவீதம் குறைந்து, 878 டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த இறுதி புள்ளி விவரத்தை, உலக தங்க கவுன்சில் அடுத்த வாரம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சென்ற ஆண்டு, இந்தியாவின் தங்கம் இறக்குமதி 969 டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.தங்கத்திற்கான தேவை குறைந்துள்ளதாலும், இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளதாலும், நடப்பு 2012ம் ஆண்டிலும், தங்கம் இறக்குமதி, சென்ற ஆண்டின் அளவிலேயே இருக்கும் என உலக தங்க கவுன்சிலின் நிர்வாக இயக்குனர் (இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள்) அஜய் மித்ரா தெரிவித்துள்ளார்.எனினும், தங்கத்தில் முதலீடு செய்யக்கூடிய கோல்டு ஈ.டி.எப்., போன்ற பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் மேலும் கூறினார்.சென்ற வெள்ளியன்று 10 கிராம் தங்கத்தின் விலை 28 ஆயிரத்து 190 ரூபாயாக இருந்தது. இது, நடப்பு வாரத்தில் மேலும் குறைந்துள்ளது. இருந்த போதிலும், வரும் மார்ச் மாதம், 10 கிராம் தங்கத்தின் விலை 28 ஆயிரத்து 300ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், வரும் ஜூன் மாதம் இதன் விலை 27 ஆயிரத்து 537 என்ற வரம்பிற்குள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.பணவீக்கம்கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 10 கிராம் தங்கத்தின் விலை 29 ஆயிரத்து 750 ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது. இதற்கு முன், 2010ம் ஆண்டு நவம்பரில் தான் 10 கிராம் தங்கத்தின் விலை, உச்சபட்சமாக 29 ஆயிரத்து 516 ரூபாய் என்ற அளவில் காணப்பட்டது.பணவீக்கம், வட்டி உயர்வு உள்ளிட்டவற்றை சமாளிக்கக் கூடிய முதலீடாக தங்கம் விளங்குகிறது. மேலும், ரிசர்வ் வங்கியும் தங்கத்தை வாங்கி வருகிறது. இதனால், தங்கம் விலை உயரும் எனலாம்.தங்கத்தை இறக்குமதி செய்யும் பல வங்கிகள், அதன் விலை உயரும் என்று கருத்து தெரிவித்துள்ளன. பன்னாட்டு வங்கியான ஸ்கோட்டியா மொகாட்டா, எச்.டீ.எப்.சி பேங்க் ஆகியவை தங்கம் விலை, வரும் நிதியாண்டில் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளன. வட்டி விகிதம்வரும் ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், 10 கிராம் தங்கத்தின் விலை 30 ஆயிரம் ரூபாயை தாண்டும் என இந்த வங்கிகள் மதிப்பீடு செய்துள்ளன.அமெரிக்க ரிசர்வ் வங்கி, கடந்த பல ஆண்டுகளாக வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை மிக மிக குறைவான அளவிலேயே வைத்துள்ளது. மேலும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது. இதனால், தங்கத்தின் விலை, வரும் மாதங்களில் சர்வதேச அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)