பதிவு செய்த நாள்
17 பிப்2012
13:58

புதுடில்லி: 2011 டிசம்பர் மாதத்தில் 1,118 கோடி டாலருக்கு சேவைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது, நவம்பர் மாதத்தில் 1,128 கோடி டாலராக இருந்தது. ஆக, ஏற்றுமதி 0.88 சதவீதம் குறைந்துள்ளது. இதே மாதங்களில் சேவைகள் இறக்குமதி 740 கோடி டாலரிலிருந்து 766 கோடி டாலராக அதிகரித்துள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் அண்மைக் கால புள்ளிவிவரம் ஒன்றில் இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வங்கி 2011 ஜுன் மாதத்திலிருந்து நம் நாடு மேற்கொள்ளும் சேவைகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது. அம்மாதம் 15ம் தேதி முதல் முறையாக ஏப்ரல் மாத சேவைகள் வர்த்தகம் குறித்த தகவலை வெளியிட்டது. ஒரு குறிப்பிட்ட மாதத்திற்கான சேவைகள் ஏற்றுமதி விவரம் சுமார் 45 தினங்களுக்குப் பின் வெளியிடப்படுகிறது. சரக்குகள் ஏற்றுமதியைப் பொறுத்தவரை நம் நாட்டில் வர்த்தக பற்றாக்குறை நிலவுகிறது. அதாவது ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி அதிகமாக உள்ளது. அதே சமயம், சேவைகளைப் பொறுத்தவரை இறக்குமதியை காட்டிலும் ஏற்றுமதி அதிகமாக உள்ளதால் இப்பிரிவில் வர்த்தக உபரி காணப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|