பதிவு செய்த நாள்
18 பிப்2012
01:49

புதுடில்லி:நடப்பு பருவத்தில், கரும்பு பயிரிடப்படும் பரப்பளவு அதிகரித்ததை அடுத்து, நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.60 கோடி டன்னாக அதிகரிக்கும் என, இந்திய சர்க்கரை உற்பத்தியாளர் கூட்டமைப்பு (இஸ்மா) மதிப்பிட்டுள்ளது.
நடப்பு சர்க்கரை பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்), நாடு முழுவதும், 524 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஆலைகளின் சர்க்கரை உற்பத்தி, அக்டோபர் முதல் பிப்ரவரி 15ம் தேதி வரையிலான காலத்தில், 1.61 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய பருவத்தின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 15 சதவீதம் (1.40 கோடி டன்) அதிகமாகும்.மதிப்பீட்டு காலத்தில், மேற்கொள்ளப்பட்ட மொத்த சர்க்கரை உற்பத்தியில், மகாராஷ்டிரா மாநிலத்தின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது.
இம்மாநிலத்தின் கரும்பு பிழிதிறன், 11.20 சதவீதம் வளர்ச்சி கண்டதையடுத்து, சர்க்கரை உற்பத்தி 14 சதவீதம் உயர்ந்து, 56.60 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.இதைத் தொடர்ந்து, உத்தர பிரதேசத்தின் சர்க்கரை உற்பத்தி 13 சதவீதம் உயர்ந்து, 45.10 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இம்மாநிலத்தின் பிழிதிறன் 8.96 சதவீதத்திலிருந்து 8.75 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், தமிழகம் (7.10 லட்சம் டன்), கர்நாடகம் (25.3 லட்சம் டன்), ஆந்திரா (7.30 லட்சம் டன்) ஆகிய தென் மாநிலங்களிலும் சர்க்கரை உற்பத்தி, சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது.நடப்பு 2011-12ம் ஆண்டில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.60 கோடி டன்னாகவும், உள்நாட்டில், இவற்றிற்கான தேவை, 2.20 கோடி டன்னாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.42 கோடி டன்னாக இருந்தது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|