பதிவு செய்த நாள்
18 பிப்2012
10:18

மும்பை: சர்வதேச பொருளாதார மந்தநிலையிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இந்திய ஐ.டி. நிறுவனங்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன. நடப்பு நிதி ஆண்டில் இத்துறையில் புதிதாக 2.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.2012-13ம் நிதி ஆண்டிற்காக இதுவரை வளாகத் தேர்வு வாயிலாக ஒரு லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என நாஸ்காம் அமைப்பின் தலைவர் ராஜேந்திர பவார் தெரிவித்துள்ளார். நடப்பு நிதி ஆண்டில், ஐ.டி. துறையின் வருவாய் 16 சதவீதம் அதிகரிக்கும் நிலையில், வேலைவாய்ப்பு பெறுபவர்கள் எண்ணிக்கை 10 சதவீதம் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய ஐ.டி. நிறுவனங்கள் உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் அளித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவில் 25 ஆயிரம் பேருக்கு வேலை அளித்துள்ளதாக டி.சி.எஸ். நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இந்திய ஐ.டி. துறை அபார வளர்ச்சி கண்டு வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் இத்துறையின் வருவாய் 10 கோடி டாலராக இருந்தது. இது தற்போது பன் மடங்கு அதிகரித்து 10,000 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு உள்நாட்டிலும் வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது.
மேலும் ஐ.டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|