பதிவு செய்த நாள்
18 பிப்2012
11:36

புதுடில்லி: நடப்பு ஆண்டில் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடையும் கொள்முதல் பருவத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 3.50 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய இந்திய உணவு கழகம் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சிராஜ் ஹுசைன் தெரிவித்துள்ளார்.பொது விநியோகம் மற்றும் அவசர தேவைகளின் நிமித்தமாக இக்கழகம் நெல் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு தானியங்களை கொள்முதல் செய்து வருகிறது. கடந்த சந்தை பருவத்தில் 3.42 கோடி டன் நெல்லை கொள்முதல் செய்திருந்த இந்நிறுவனம், நடப்பு பருவத்தில் பஞ்சாபில் 77.31 லட்சம் டன்னையும், சத்தீஸ்கரில் 30.55 லட்சம் டன்னையும், ஆந்திர பிரதேசத்தில் 25.40 லட்சம் டன்னையும் கொள்முதல் செய்து இதுவரை மொத்தம் 2.00 கோடி டன் நெல் கொள்முதல் செய்துள்ளதாக ஹூசைன் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிறுவனம் சாதாரண நெல்லை கிலோ ரூ.10-க்கும், ஏ கிரேடு ரக நெல்லை கிலோ ரூ.10.30க்கும் கொள்முதல் செய்கிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|