பதிவு செய்த நாள்
18 பிப்2012
15:38

சர்வதேச அளவில் போக்ஸ்வேகன் தனது கார் உற்பத்தி தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்த்துவதற்கும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த போக்ஸ்வேகன் நிறுவனம் ஐரோப்பாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளராக திகழ்கிறது. ஆடி, துகாட்டி, ஸ்கோடா, லம்போர்கினி, மேன் டிரக்ஸ், சீட் என ஏராளமான கார் நிறுவனங்கள் போக்ஸ்வேகனின் துணை நிறுவனங்களாக செயல்படுகின்றன. ஐரோப்பா மட்டுமின்றி சர்வதேச அளவில் கார் உற்பத்தியில் அந்த நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸ், டொயோட்டோவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போது போக்ஸ்வேகனுக்கு உலகம் முழுவதும் 39 கார் ஆலைகள் உள்ளது. இந்த நிலையில், உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க திட்டமிட்டு அந்த நிறுவனம் தனது கார் ஆலைகளின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. தனது கார் உற்பத்தியை உயர்த்துவதன் மூலம், உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க முடியும் என்று நம்புகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|