பதிவு செய்த நாள்
19 பிப்2012
01:57

சென்னை:தங்க ஆபரணங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம்,8,500 கோடி ரூபாய் விற்றுமுதல் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.இதுகுறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கல்யாணராமன் கூறியதாவது:நிறுவனத்திற்கு, நாடு முழுவதும், 30 சில்லரை விற்பனை நிலையங்கள் உள்ளன. இதில், பெரும்பாலானவை நிறுவனத்திற்கு சொந்தமானவையாகும். நிறுவனம், விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதனிடையே பிரேசில் நாட்டைச் சேர்ந்த எம்பெரர் நிறுவனத்திடமிருந்து, "பெனோம் 100' என்ற விமானத்தை நிறுவனம் வாங்கியுள்ளது.இதையடுத்து, நாட்டில் தனியாக விமானம் வைத்துள்ள, 61வது நிறுவனம் என்ற சிறப்பை கல்யாண் ஜுவல்லர்ஸ் பெற்றுள்ளது. ஏழு பேர் அமர்ந்து செல்லக் கூடியதும், 25 நிமிடத்தில், 41 ஆயிரம் அடி உயரத்திற்கு @மல் செல்லக் கூடிய இந்த விமானம், தொடர்ந்து 3.50 மணி நேரம் பறக்கக் கூடியது. இவ்வாறு கல்யாணராமன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|