பதிவு செய்த நாள்
19 பிப்2012
01:59

புதுடில்லி:பருப்பு வகைகள் உற்பத்தி, நடப்பு 2011 - 12ம் பயிர் பருவத்தில் (ஜூலை - ஜூன்) 1.73 கோடி டன்னாக இருக்கும் என, மத்திய வேளாண் துறை மதிப்பிட்டுள்ளது.பருப்பு வகைகளுக்கான தேவை உயர்ந்து வருகிறது. ஆனால், அதற்கேற்ப பருத்தி உற்பத்தி இல்லாத நிலை உள்ளது. பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பருப்பு வகைகளின் உற்பத்தி, கடந்த 2005ம் ஆண்டு முதல் (2008 - 09 நீங்கலாக) ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.கடந்த 2005 - 06ம் பயிர் பருவத்தில், பருப்பு வகைகளின் உற்பத்தி 1.34 கோடி டன்னாக இருந்தது. இது, 2006 - 07ம் ஆண்டில் 1.42 கோடி டன்னாகவும், 2007 - 08ம் ஆண்டில் 1.47 கோடி டன்னாகவும் உயர்ந்திருந்தது.2008 - 09ம் பயிர் பருவத்தில், பருப்பு வகைகளின் உற்பத்தி 1.45 கோடி டன்னாகவும், 2009 - 10ல் 1.46 கோடி டன்னாகவும் இருந்தது.இந்நிலையில், கடந்த 2010 - 11ம் ஆண்டு, பருப்பு வகைகளின் பயிரிடும் பரப்பளவு அதிகரித்ததை அடுத்து, பருப்பு உற்பத்தி, சாதனை அளவாக 1.82 கோடி டன்னாக உயர்ந்தது.இயற்கை இடர்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால், நடப்பு பயிர் பருவத்தில் பருப்பு வகைகளின் உற்பத்தி, கடந்த ஆண்டை விட குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|