பதிவு செய்த நாள்
19 பிப்2012
02:01

புனே:உள்நாட்டு சந்தைகளில் ஸ்ட்ராபெரி பழங்களுக்கான தேவை, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. ஸ்ட்ராபெரி அதிகம் விளையும் மகாராஷ்டிராவின் பஞ்சாகனி மற்றும் மகாபலேஸ்வர் பகுதிகளிலிருந்து, இதன் வரத்து 16,000 - 18,000 டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு, 14,000 - 15,000 டன் என்ற அளவில் குறைந்திருந்தது.நாட்டின் ஸ்ட்ராபெரி பழங்கள் உற்பத்தியில், பஞ்சாகனி மற்றும் மகாபலேஸ்வர் பகுதிகளின் பங்களிப்பு 85 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எஞ்சிய பங்களிப்பை, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் வழங்குகின்றன.
நாட்டின் ஸ்ட்ராபெரி பழங்களின் மொத்த விற்பனையில், சுற்றுலா பயணிகளின் பங்களிப்பு 50 சதவீதமாக உள்ளது. மும்பை மற்றும் புனே மாநிலங்கள் இதற்கு முக்கிய சந்தைகளாக விளங்குகின்றன. இவை தவிர, தற்போது, சென்னை, பெங்களூரு மற்றும் கோவா ஆகிய பகுதிகளிலும் இதற்கான தேவை அதிகரித்து வருகிறது என ஸ்ட்ராபெரி பயிரிடுவோர் கூட்டமைப்பின் தலைவர் பாபாசாகேப் பில்லாரே தெரிவித்தார்.ஸ்ட்ராபெரி பழங்கள் விரைவில் அழுகும்தன்மை கொண்டவை. இதனால், வெகு தொலைவில் உள்ள சந்தைகளுக்கு இதைக் கொண்டு செல்வது கடினம்.
தற்போது, பெங்களூருக்கு 20 டன் என்ற அளவிலும், சென்னை மற்றும் கோவா பகுதிகளுக்கு முறையே 15 டன் மற்றும் 10 டன் என்ற அளவிலும் ஸ்ட்ராபெரி பழங்கள் அனுப்பப்படுகின்றன. ஸ்ட்ராபெரி பருவம், நவம்பர் துவங்கி மார்ச் வரை கடைபிடிக்கப்படுகிறது. மேலும், இந்தியாவில், ஸ்ட்ராபெரி பயிரிடும் பரப்பளவு 1,700 முதல் 1,800 ஏக்கராக உள்ளது. 1,500க்கும் அதிகமான விவசாயிகள் இத்தொழில் ஈடுபட்டுள்ளனர்.
உற்பத்திச் செலவு அதிகரிப்பு, கூலி உயர்வு போன்றவற்றால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், வரும் 2013ம் ஆண்டில், ஸ்ட்ராபெரி பயிரிடும் பரப்பளவு கூடுதலாக 100 ஏக்கர் அளவிற்கே அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு பாபாசாகேப் பில்லாரே @மலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|