பதிவு செய்த நாள்
19 பிப்2012
11:29

உலகின் முன்னணி கேமிரா நிறுவனமான கெனான் நிறுவனம் இந்தியாவில் அதன் தொழிற்சாலையை அமைக்க தயங்கி வருகிறது. உலகில் அதிகம் விற்கும் கேமிராக்களில் கெனான் நிறுவன கேமிராவும் ஒன்று. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கெனான் நிறுவனத் தொழிற்சாலை செயல்பட்டு வருகையில், இந்தியாவில் அதன் தொழிலை விரிவுப்படுத்தவும், புதிய ரக கேமிராக்களை அறிமுகப்படுத்தவும் எண்ணியுள்ளது. இதற்காக இந்தியாவில் புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்கான ஏற்ற சூழ்நிலைகள் இந்தியாவில் இல்லாததால் அந்நிறுவனம் சற்று தயங்கி வருகிறது.
இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் மசாயா மெய்டா கூறுகையில், இந்தியாவில் புதிய தொழிற்சாலை அமைக்க எங்களுக்கு விருப்பம் தான்.ஆனால் தொழில் தொடங்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகளான சுத்தமான தண்ணீர் மற்றும் தடையற்ற மின்சாரம் போன்ற வசதிகள் இந்தியாவில் சரிவர இல்லாமல் இருக்கிறது. இதுதொடர்பாக இந்தியா உடனும், பேசி வருகிறோம். மேலும் அடிப்படை வசதிகள் தவிர, வரி தொடர்பான சலுகைகள் உள்ளிட்ட விஷயங்களிலும் இந்திய அரசு எங்களுக்கு உதவ வேண்டும். ஒருவேளை நாங்கள் எதிர்பார்க்கும் எல்லா வசதிகளையும் இந்திய அரசு எங்களுக்கு செய்து கொடுக்குமேயானால் நாங்கள் புதிய தொழிற்சாலை அமைப்போம் என்று கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|