பதிவு செய்த நாள்
19 பிப்2012
15:14

மும்பை: மேலாண்மை படிப்புகளின் மீதான ஆர்வம் குறைந்ததால் நாடு முழுவதும் சுமார் 65 மேலாண்மை கல்லூரிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை டிகிரி படித்து முடித்தாலே அவர்களின் இலக்கு எம்.பி.ஏ., படிப்பதாக இருக்கும். இந்தபடிப்பின் முக்கிய நோக்கமே தொழில் துவங்குவதிலும், அதை திறம்பட நடத்துவதற்குமான வழிமுறைகளும் சொல்லும் பாடமாக இந்த படிப்பு இருக்கிறது என்பது தான். இதனால் பலரும் எம்.பி.ஏ., படிப்பின் மீது ஆர்வம் செலுத்தினர். இதனால் நாடு முழுக்க ஏகப்பட்ட மேலாண்மை கல்லூரிகள் உருவாகின.
தற்போதைய கணக்கின் படி நாடு முழுக்க 3900 கல்லூரிகள் இருக்கிறது. இதில் மொத்தம் 3.5 லட்சம் சீட்கள் இருக்கிறது. ஆனால் இங்கு படிப்பதற்கு தான் ஆள் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் நாடு முழுக்க உள்ள 65 மேலாண்மை கல்லூரிகளை மூட அந்த கல்வி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் முறையற்ற கல்வி முறையால் பலரும் எம்.பி.ஏ., படிப்பு முடித்தும் அவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைக்காததும், இளைஞர்களிடம் எம்.பி.ஏ. படிப்பு மீதான ஆர்வம் குறைந்ததுமே காரணம் என்கிறார்கள்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|