பதிவு செய்த நாள்
19 பிப்2012
15:42

மும்பை: உலகில் அதிகம் பணம் கொழிக்கும் கிரிக்கெட் அமைப்பு பி.சி.சி.ஐ., ஆனால் இந்த அமைப்பு வருமான வரித்துறைக்கு ரூ.372 கோடியை வரி பாக்கி வைத்திருக்கிறது.
இதுகுறித்து வருவமான வரித்துறை அதிகாரி சுபாஷ் அகர்வால் கூறுகையில், பி.சி.சி.ஐ., தன்னார்வ அமைப்பு என்பதால் வரி விலக்கு கேட்டு இருந்தது. ஆனால் பி.சி.சி.ஐ., இப்போது முழுக்க முழுக்க வர்த்தக ரீதியாக செயல்படுவதால் வரி விலக்கு அளிக்க முடியாது என்று வருமான வரித்துறை அறிவித்துவிட்டது. அதன்படி 2009-10ம் ஆண்டுக்கு பி.சி.சி.ஐ., ரூ.413 கோடியை வரியாக செலுத்த வேண்டும். ஆனால் அந்த அமைப்பு வெறும் ரூ41.91கோடியை மட்டுமே வரியாக செலுத்தியுள்ளது. இதனால் அந்த அமைப்பு ரூ.373 கோடியை வரி பாக்கி வைத்திருக்கிறது. மேலும் இந்த வரிபாக்கி 2009-10ம் ஆண்டுக்கு மட்டும் தான் என்றும், இதுபோக 2010-11 மற்றும் 2011-12ம் ஆண்டுக்கான வரிபாக்கியும் உள்ளது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|