பதிவு செய்த நாள்
19 பிப்2012
16:01

புதுடில்லி: கிங்பிஷர் நிறுவனம் முன் அறிவிப்பு இன்றி, திடீரென 80 விமானங்களின் சேவையை ரத்து செய்தது பயணிகள் இடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து மத்திய விமானத்துறை அமைச்சகமும் கிங்பிஷர் நிறுவனத்திடம் விசாரணை மேற்கொண்டு இருக்கிறது.
நாட்டில் உள்ள முக்கிய விமான சேவைகளில் கிங்பிஷர் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் திடீரென எந்தவித முன்அறிவிப்பும் இன்றி சென்னை, மும்பை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கான விமான சேவையை ரத்து செய்து இருக்கிறது. இன்று மட்டும் கிட்டத்தட்ட 80 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த நிலைமை இன்னும் ஓரிரு நாட்களுக்கு இருக்க கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் சில ஊர்களுக்கு முன்பதிவுக்கான சேவையையும் நிறுத்தி வைத்துள்ளது அந்த நிறுவனம். இதனால் ஏராளமான பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதனிடையே எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி விமானங்கள் சேவையை ரத்து செய்தது குறித்து கிங்பிஷர் நிறுவனத்திடம் விமானத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு இருக்கிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|