தங்கம் விலை சற்று குறைவுதங்கம் விலை சற்று குறைவு ... வெள்ளி கிலோ ஒரு லட்சத்தை எட்டுகிறது வெள்ளி கிலோ ஒரு லட்சத்தை எட்டுகிறது ...
நுகர்வோர் விலை குறியீட்டு எண் பணவீக்கம் 7.65 சதவீதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2012
02:12

புதுடில்லி:மத்திய அரசு, முதன்முறையாக, தேசிய அளவில், கிராமம் மற்றும் நகர்புறங்களில், சில்லரை விற்பனை அடிப்படையிலான பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது.சில்லரை விற்பனையில், நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் அடிப்படையில், நாட்டின் பணவீக்கம், சென்ற ஜனவரி மாதத்தில், 7.65 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
இதே மாதத்தில், ஆண்டுக்கணக்கின் அடிப்படையில், உணவு, குளிர்பானங்கள் ஆகியவற்றின் விலை, 4.11 சதவீதம் என்ற அளவில் மிதமாக அதிகரித்துள்ளது. இது தவிர, எரிபொருள், விளக்குகள், துணிகள், படுக்கைகள், மற்றும் காலணிகள் ஆகிய துறைகளுக்கான பணவீக்கம் இரட்டை இலக்கமாக உள்ளது.
சென்ற ஜனவரியில், கிராமம் மற்றும் நகர்புறங்களில், ஒட்டுமொத்த சில்லரை விற்பனை அடிப்படையிலான பணவீக்கம் முறையே, 7.38 சதவீதம் மற்றும் 8.25 சதவீதம் என்ற அளவில் உள்ளது. சென்ற ஜனவரியில், காய்கறிகளுக்கான பணவீக்கம், கடந்தாண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 24 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.இருப்பினும், இதர உணவு மற்றும் பானங்களுக்கான பணவீக்கம் உயர்ந்துள்ளது. குறிப்பாக, கிராமம் மற்றும் நகர் பகுதிகளில், இதற்கான பணவீக்கம் முறையே 4.18 மற்றும் 3.98 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
ஆண்டுக்கணக்கில், பால் மற்றும் பால் பொருட்களுக்கான பணவீக்கம், 16.53 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்துள்ளது. மேலும், எண்ணெய், கொழுப்பு நிறைந்த பொருட்களின் பணவீக்கம் 13.74 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. மேலும், ஊறுகாய் வகைகள் மற்றும் நறுமணப் பொருட்கள் ஆகியவற்றிற்கான பணவீக்கம் 11.83 சதவீதம் அதிகரித்துள்ளது. பழங்களின் விலை 10.62 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
சென்ற ஜனவரி மாதத்தில், முட்டை, இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றிற்கான பணவீக்கம் 10.45 சதவீதம் உயர்ந்துள்ளது. உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றிற்கான விலை முறையே 2.69 மற்றும் 5.66 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. மேலும், சர்க்கரை விலை, கடந்தாண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 1.84 சதவீதம் உயர்ந்துள்ளது.
நாடு தழுவிய அளவில், எரிசக்தி மற்றும் விளக்குகள் ஆகியவற்றிற்கான பணவீக்கம் 13.13 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, கிராமப்புறங்களில், 11.52 சதவீதம் என்ற அளவிலும், நகர்புறங்களில், 12.43 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது. மேற்கண்ட புள்ளிவிவரங்கள் அனைத்தும், 310 பெரு நகரங்கள் மற்றும் நகரங்களிலும், 1,180 கிராமப் பகுதிகளிலும் திரட்டப்பட்டது ஆகும். மத்திய அரசு, வீடுகள் மற்றும் இதர வகைகளுக்கான பணவீக்கத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)