பதிவு செய்த நாள்
23 பிப்2012
00:14
புதுடில்லி,: சென்ற 2011ல், சர்வதேச அளவிலான காபி பயன்பாடு 13.65 கோடி மூட்டைகளாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டின் பயன்பாட்டை விட, 2 சதவீதம் (13.50 கோடி மூட்டைகள்) அதிகம் என, சர்வதேச காபி வாரிய கூட்டமைப்பு (ஐ.சி.ஓ) தெரிவித்துள்ளது.ஏற்றுமதி நாடுகளில், நுகர்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் புதிய சந்தைகளில் காபிக்கான தேவை உயர்வு போன்றவற்றால், இதன் பயன்பாடு உலகளவில் வளர்ச்சியடைந்துள்ளது.குறிப்பாக, இந்தியாவில், காபி பான விற்பனை மையங்களில், இதன் விற்பனை சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.இதற்கு எடுத்துக்காட்டாக, 2009ல், 1 லட்சத்து 2 ஆயிரம் டன்னாக இருந்த காபி பயன்பாடு, 6 சதவீதம் வளர்ச்சி கண்டு, சென்ற 2010ல், 1 லட்சத்து 8 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது என, இந்திய காபி வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|