பதிவு செய்த நாள்
24 பிப்2012
02:15

அடுக்குமாடி கட்டடங்கள் அதிகரித்து வரும் நிலையில், பழைய சீமை ஓடுகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. புதிய ஓடு 17 ரூபாய்க்கு விற்க்கும் நிலையில் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் பழைய ஓடுகள் விற்பனை ஜரூராக நடக்கிறது.
முன்பு, சீமை ஓடுகளால் வேயப்பட்ட வீடுகள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. தற்போது, கிராமங்களில் கூட கான்கிரீட் கட்டடங்களே காட்சியளிக்கின்றன. எனினும், சீமை ஓடுகளுக்கு மட்டும் நல்ல வரவேற்பு உள்ளது.
ஈரோடு, வெள்ளோடு கிராமத்தில், மகளிர் சுய உதவிக்குழுவினர் பழைய ஓடுகள், மரக் கதவு மற்றும் உத்திரம், தூண் ஆகியவற்றை, கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் இருந்து, குறைந்த விலைக்கு வாங்குகின்றனர்
தரமான ஓடுகள், மரக்கதவுகள், ஜன்னல்கள் மற்றும் மரச்சாமான்களை தனியாக பிரித்து, மலிவு விலையில் விற்பனை செய்கின்றனர்.இன்றைய நிலவரப்படி புதிய சீமை ஓடுகள், 13 முதல் 17 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பழைய ஓடுகள் ஐந்து முதல் ஏழு ரூபாய் வரை விற்கப்படுகிறது. தற்போதுள்ள கட்டடப் பொருட்கள் விலைவாசி தாறுமாறாக ஏறுவதால், மக்கள் பழைய ஓடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|