பதிவு செய்த நாள்
24 பிப்2012
02:59

மும்பை:நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில் 14.3 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து 68 ஆயிரத்து 204 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
தேவை அதிகரிப்பு:வெளிநாடுகளில் இந்திய நகைகள் மற்றும் நவரத்தினங்களுக்கான தேவை அதிகரித்ததையடுத்து, அவற்றின் ஏற்றுமதி உயர்ந்துள்ளது.சென்ற ஜனவரியில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 9 சதவீதம் வளர்ச்சி கண்டு 16 ஆயிரத்து 859 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.அதே சமயம், மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப் பட்ட 10 மாத காலத்தில், வெட்டப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்களின் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பின் அடிப்படையில் 3.6 சதவீதம் குறைந்து 92 ஆயிரத்து 904 கோடி ரூபாயாக உள்ளது.
அளவின் அடிப்படையிலும், ஏற்றுமதி 443.15 லட்சம் காரட்டுகளாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 510.57 லட்சம் காரட்டுகள் என்ற அளவில் இருந்தது.மத்திய அரசு, உள்நாட்டில் வைரத் தொழிற்சாலைகளின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், அதிக அளவில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை உருவாக்கும் நோக்கத்தில், வெட்டப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்களின் இறக்குமதிக்கு 2 சதவீத சுங்க வரி விதித்தது.
தங்க ஆபரணங்கள்:இதன் காரணமாக, மதிப்பீட்டு காலத்தில், நறுக்கிய மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்களின் இறக்குமதி 12 சதவீதம் குறைந்து, 61 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. குறிப்பாக, சூரத் நகரில் இறக்குமதி சரிவடைந்துள்ளது.தங்க ஆபரணங்களை பொறுத்தவரை, ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. திப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 10 மாதங்களில், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 37 சதவீதம் வளர்ச்சி கண்டு, 36 ஆயிரத்து 161 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது, சென்ற ஜனவரியில் 45 சதவீதம் வளர்ச்சி கண்டு 3,877 கோடி ரூபாயாக இருந்தது. தங்கப் பதக்கங்கள் மற்றும் தங்க நாணயங்கள் ஏற்றுமதி, சென்ற 10 மாதங்களில் 59 சதவீதம் வளர்ச்சி கண்டு 27 ஆயிரத்து 565 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதே காலத்தில், வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது.
கச்சா வைரங்கள்:கச்சா வைரங்கள் இறக்குமதி 31.5 சதவீதம் உயர்ந்து 58 ஆயிரத்து 104 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதே சமயம், இதே காலத்தில், கச்சா வைரங்கள் ஏற்றுமதி அளவின் அடிப்படையில், 1,300 லட்சம் காரட்டில் இருந்து 1,038 காரட்டாக குறைந்துள்ளது.
அமெரிக்காவில் இந்திய வைரங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்திய வைரங்கள் ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது. எனினும், அமெரிக்க பொருளாதார மந்த நிலையால், வைரங்கள் இறக்குமதி வளர்ச்சி குறைந்துள்ளது.
சூரத் வைரம்:குஜராத்தின் வர்த்தக நகரமாக சூரத் விளங்குகிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்த வர்த்தகர்கள், 1901ல் வைரங்களை பட்டை தீட்டும் தொழிலை சூரத்தில் துவங்கினர். இங்கிருந்து 1970ல் முதன் முதலாக அமெரிக்காவிற்கு பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
இன்று, உலகளவில் வைரங்களை பட்டை தீட்டும் தொழிலில், 92 சதவீதம் இந்த நகரில் தான் நடைபெறுகிறது. இத்தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். வார்ச்சா பகுதியில் தான் பெரும்பாலான தொழிற்சாலைகள் உள்ளன. 5 லட்சத்திற்கும் அதிகமானோர், வைரங்களை நறுக்கி, பட்டை தீட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
சர்வதேச பொருளாதார மந்தநிலையால், 2008ம் ஆண்டு முதல் சூரத்தில் வைரங்களை பட்டை தீட்டும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொழிலில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். ஜவுளி தொழிலும் சூரத்தில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|