பதிவு செய்த நாள்
24 பிப்2012
10:43

சென்னை:"கொப்பரைத் தேங்காய் கொள்முதலை, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மேற்கொள்ளும்' என, தென்னை வளர்ச்சி வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தென்னை வளர்ச்சி வாரியத்தின் மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி:மாநில அளவில், கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தை, நடப்பாண்டு விலை ஆதாரத் திட்டத்தில் நியமித்து, தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டது.
அதன்படி, எண்ணெய் கொப்பரையை குவிண்டாலுக்கு 5,100 ரூபாய்க்கும் (ரூ.51 ஒரு கிலோ), மற்றும் உருண்டை கொப்பரையை குவிண்டாலுக்கு 5,350 ரூபாய்க்கும் (ரூ.53.50 ஒரு கிலோ) தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் கொள்முதல் செய்யும்.கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்ய, இந்த இணையம் தேசிய விவசாயக் கூட்டுறவு விற்பனைக் கூட்டமைப்புடன் (Nஅஊஉஈ) ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
தமிழகம் மற்றும் கேரளத்தில், எண்ணெய் கொப்பரை மற்றும் தேங்காய் விலை வீழ்ச்சியின் காரணமாக, தேசிய அளவிலான விலை ஆதாரத் திட்டத்தை நிர்ணயிக்கும், "Nஅஊஉஈ' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜு குப்தா, தென்னை வளர்ச்சி வாரிய தலைவர் ஜோஸ் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில், "குறைந்தபட்ச ஆதாரத் திட்டத்தில் கொப்பரை கொள்முதல் செய்ய, "Nஅஊஉஈ' எல்லா வித உதவிகளையும் அளிக்கும்' என, தெரிவிக்கப்பட்டது.
தென்னை வளர்ச்சி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேங்காய் உற்பத்தியாளர்கள் சங்கங்கள், வேளாண் துறையின் விவசாயக் குழுக்கள் போதிய தேங்காய் உலர்தளத்திற்கான வசதிகள் இருந்தால், இந்திய அரசு நிர்ணயித்த விலையான, 1,400 ரூபாய்க்கு, உறிக்கப்பட்ட விளைந்த தேங்காயை, அந்தந்த பகுதி விவசாயிகளிடம் இருந்து, கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|