பதிவு செய்த நாள்
24 பிப்2012
14:37

மார்ச் மாதம் தனது புதிய 110 சிசி ஹயாட்டே பைக்கை சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்தியாவில் 100சிசி முதல் 125 சிசி வரையிலான பைக்குகள் விற்பனையில் பெரும் பங்களிப்பை அளித்து வருகின்றன. இந்த செக்மென்ட்டில் ஹீரோ பேஷன், ஹோண்டா ஷைன் உள்ளிட்ட பைக் மாடல்கள் முன்னிலை வகிக்கின்றன. இந்நிலையில், இந்த செக்மென்ட்டில் முக்கிய இடத்தை பிடிக்கும் வகையில் புதிய பைக்கை சுசூகி அறிமுகம் செய்ய உள்ளது. ஹீட், ஜீயஸ் மற்றும் ஸ்லிங்ஷாட் ஆகிய பைக்குகளை சுஸுகி விற்பனை செய்து வந்தாலும், எதிர்பார்த்த விற்பனையை அந்த மாடல்கள் கொடுக்கவில்லை. இதையடுத்து, இந்திய வாடிக்கையாளர்கள் விரும்பும் அம்சங்களுடன் ஹயாட்டே என்ற பெயரில் புதிய 110 சிசி பைக்கை சுசூகி களமிறக்குகிறது. கடந்த மாதம் நடந்த டெல்லி ஆட்டோ கண்காட்சியில் இந்த புதிய பைக்கை சுஸுகி பார்வைக்கு வைத்திருந்தது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|