பதிவு செய்த நாள்
25 பிப்2012
01:50

புதுடில்லி:மூலப் பொருட்கள் விலை உயர்வை அடுத்து, சாதாரண வகை சைக்கிள் விலை சற்று உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள "ஏவான்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆங்கர் சிங் பவா கூறியதாவது:
இந்தியாவில், தற்போது, சாதாரண வகை சைக்கிள் ஒன்றின் விலை, 2,700 ரூபாய் என்ற அளவில் உள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, சைக்கிள் தயாரிப்பிற்கான நிக்கல், உருக்கு போன்ற மூலப் பொருட்களின் விலை, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெகுவாக அதிகரித்துள்ளது.அதாவது, கடந்த 45 நாள்களில் உருக்கு விலை டன் ஒன்றுக்கு, 2,100 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால், சாதாரண வகை சைக்கிள் விலை, தற்போதைய விலையை விட 2 சதவீதம் உயர்ந்து, கூடுதலாக, 55-66 ரூபாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஆங்கர் சிங் பவா தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|