பதிவு செய்த நாள்
25 பிப்2012
16:49
இந்தாண்டிலேயே ஹோண்டா சிட்டி டீசல் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் ஹோண்டா சிட்டி டீசல் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி கார்தான் விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், பெட்ரோல் மாடலில் மட்டுமே சிட்டி கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் மாடல்கள் இல்லாமல் விற்பனையில் சிறிது பின்னடவை சந்தித்து வரும் ஹோண்டா விரைவில் டீசல் கார் மாடல்களை வரிசை கட்ட இருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் டீசல் மாடல்களை அறிமுகம செய்ய இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.ஆனால், இந்தியாவில் சிறிய கார்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் இந்த ஆண்டுக்குள் பிரியோ டீசல் மாடலை அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தோம்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|