பதிவு செய்த நாள்
26 பிப்2012
01:17

மும்பை : சென்ற 2010-11ம் நிதியாண்டில், வங்கி சேவை தொடர்பான வாடிக்கையாளர்களின் புகார்கள், 10 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், புகார் குறித்த நடவடிக்கைகளுக்கான செலவினம் 53 சதவீதம் அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ) மற்றும் அதன் துணை வங்கிகளில் மேற்கொண்ட டெபாசிட் மற்றும் கடன் கணக்குகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்னைகளை தீர்க்க கோரி, அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் புகார் செய்துள்ளனர். குறிப்பாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மீது 22,307 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது, வாடிக்கையாளர்கள் அளித்துள்ள ஒட்டுமொத்த புகாரில் 31 சதவீதம். மேலும், இது, முந்தைய ஆண்டை காட்டிலும் 2 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்றாண்டு பதிவு செய்யப்பட்ட மொத்த புகாரில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மீது மட்டும் 29சதவீத அளவிற்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது, இதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 5 சதவீதம் அதிகம்.
அதேசமயம், தனியார் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளின் மீது கொடுக்கப்பட்ட புகார்கள், 4 சதவீதம் சரிவடைந்துள்ளது. தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் மீது அளிக்கப்பட்ட புகார்கள் முறையே 24 சதவீதம் மற்றும் 10 சதவீதம் என்ற அளவில் உள்ளது. வாடிக்கையாளர்கள் புகார் அளித்துள்ளதில், வங்கிகள் வழங்கும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
73 சதவீத புகார்கள், வாடிக்கையாளர்கள் கைப்பட எழுதிய புகார்களாக உள்ளன.மேலும், இ-மெயில் மற்றும் ஆன்-லைன் மூலமாக பெறப்பட்ட புகார்கள் முறையே 14 சதவீதம் மற்றும் 13 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
பெறப்பட்ட மொத்த புகாரில், 94 சதவீத புகார்கள் பைசல் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின், வங்கிகளுக்கான குறை தீர்ப்பு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|