பதிவு செய்த நாள்
26 பிப்2012
01:18

புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., நிறுவனம், குறைந்த விலையில், மூன்று டேப்லெட் கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போது, மலிவு விலை கம்ப்யூட்டர்களுக்கு மவுசு கூடி வரும் நிலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனமும் இச்சந்தையில் நுழைந்துள்ளது.
இதன்படி, இந்நிறுவனம், ரூ.3,250, ரூ.10,999 மற்றும் ரூ.13,500 விலைகளில், மூன்று டேப்லெட் கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், இரண்டு கம்ப்யூட்டர்கள், 7 அங்குல திரை மற்றும் ஆண்ட்ராய்டு, 2.3 இயக்க தொகுப்பு ஆகியவற்றை உள்ளடக்கியவை. மூன்றாவது, 8 அங்குல மற்றும் தொடுதிரை வசதி கொண்ட கம்ப்யூட்டராக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில், டேட்டா வின்ட் நிறுவனம், 2,250 ரூபாய் விலையில், 'ஆகாஷ்' என்ற டேப்லெட் கம்ப்யூட்டரை மாணவர்களுக்காக அறிமுகம் செய்தது. இதையடுத்து, பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் 'டேப்லெட் பி.சி' சந்தையில் களமிறங்கியுள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|