பதிவு செய்த நாள்
27 பிப்2012
02:35

புதுடில்லி:அமெரிக்கா, சீனா,பாகிஸ்தான் உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் சலவை சோடா மீது பொருள் குவிப்பு வரி விதிக்கப்பட உள்ளது.சலவைக்கான டிடெர்ஜென்ட், சோப்பு, பிரத்யேக கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை தயாரிக்க சலவை சோடா பயன்படுத்தப்படுகிறது.
மேலும், இவை ஜவுளி, காகிதம், உலோகம், கன நீர் தொழிற்சாலைகளுக்கும் இன்றியமையாததாக உள்ளது. ஐரோப்பிய யூனியன், உக்ரைன், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சலவை சோடா மிகக் குறைந்த விலையில் இறக்குமதியாவதால், உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால், சலவை சோடா இறக்குமதிக்கு டன்னுக்கு, 2.38 டாலர் முதல் 38.79 டாலர் வரை பொருள் குவிப்பு வரி விதிக்க வேண்டும் என, பொருள் குவிப்பு மற்றும் துணை வரிகள் தலைமை இயக்குனரகம், மத்திய வர்த்தக அமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளது. இதன் அடிப்படையில், சலவை சோடா இறக்குமதி மீது பொருள் குவிப்பு வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|