நாட்டின் ஏற்றுமதி ரூ.12 லட்சம் கோடியாக வளர்ச்சி நாட்டின் ஏற்றுமதி ரூ.12 லட்சம் கோடியாக வளர்ச்சி ... கமர்ஷியல் காஸ் சிலிண்டர் விலை:ரூ.1,667 ஆக அதிகரிப்பு கமர்ஷியல் காஸ் சிலிண்டர் விலை:ரூ.1,667 ஆக அதிகரிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மோட்டார் வாகனங்கள் விற்பனையில் விறுவிறுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2012
00:37

மும்பை: சென்ற பிப்ரவரி மாதத்தில் உள்நாட்டில் கார்கள், வர்த்தக மற்றும் இரு சக்கர வாகனங்கள் விற்பனை சூடுபிடித்திருந்தது. குறிப்பாக முன்னணி நிறுவனங்களின் வாகன ஏற்றுமதியும் சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது. வட்டி செலவினம் அதிகரித்துள்ள நிலையிலும் வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மாருதி சுசூகி நிறுவனம்நாட்டின் கார்கள் விற்பனையில், முதலிடத்தில் உள்ள மாருதி சுசூகி நிறுவனம், சென்ற பிப்ரவரி மாதத்தில், 1 லட்சத்து 18 ஆயிரத்து 949 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட 6.54 சதவீதம்
(1 லட்சத்து 11 ஆயிரத்து 645 வாகனங்கள்) அதிகமாகும்.நடப்பு நிதியாண்டில், இதுவரையிலுமாக, சென்ற பிப்ரவரி மாதத்தில் தான், இந்நிறுவனம் அதிகளவு கார்களை அதாவது 1 லட்சத்து 7 ஆயிரத்து 656 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 6.02 சதவீதம் (1 லட்சத்து 1 ஆயிரத்து 543 வாகனங்கள்) அதிகமாகும்.சென்ற 2011ம் ஆண்டு, மார்ச் மாதத்தில் தான் இந்நிறுவனம், சாதனை அளவாக, 1 லட்சத்து 10 ஆயிரத்து 424 வாகனங்களை விற்பனை செய்தது. இதையடுத்து, சென்ற பிப்ரவரியில் தான் இரண்டாவது முறையாக வாகன விற்பனை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பிப்ரவரியில், இந்நிறுவனத்தின் கார்கள் ஏற்றுமதி, 11.82 சதவீதம் வளர்ச்சி கண்டு, 10 ஆயிரத்து 102 என்ற எண்ணிக்கையிலிருந்து, 11 ஆயிரத்து 296 ஆக அதிகரித்துள்ளது.உள்நாட்டில், இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த பயணிகள் கார் விற்பனை 7.13 சதவீதம் அதிகரித்து, 87 ஆயிரத்து 851 லிருந்து, 94 ஆயிரத்து 118 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.சிறிய வகை கார்கள் (எம்-800, ஏ-ஸ்டார், ஆல்டோ மற்றும் வேகன் ஆர்) விற்பனை, 8.24 சரிவடைந்து, 53 ஆயிரத்து 515 என்ற எண்ணிக்கையிலிருந்து, 49 ஆயிரத்து 104 ஆக சரிவடைந்துள்ளது. அதேசமயம், உயர் வகை கார்கள் (எஸ்டிலோ, ஸ்விப்ட் மற்றும் ரிட்ஸ்) விற்பனை 31.06 சதவீதம் வளர்ச்சி கண்டு, 21 ஆயிரத்து 287 லிருந்து, 27 ஆயிரத்து 899 ஆக உயர்ந்துள்ளது.

மகிந்திரா நிறுவனம்

மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை, சென்ற பிப்ரவரியில் 29 சதவீதம் உயர்ந்து 43,087 ஆக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டு இதே மாதத்தில் 33,378 ஆக இருந்தது.

உள்நாட்டில் இந்நிறுவனத்தின் வாகன விற்பனை 26.57 சதவீதம் அதிகரித்து 40,461 ஆக உள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் இது, 31,967 ஆக இருந்தது. இதே காலத்தில், வாகன ஏற்றுமதி 86.11 சதவீதம் உயர்ந்து 1,411 என்ற எண்ணிக்கையில் இருந்து 2,626 ஆக உயர்ந்துள்ளது.உள்நாட்டில் இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த பயணிகள் கார் விற்பனை, 33.25 சதவீதம் உயர்ந்து 15,439ல் இருந்து 20,573 ஆக உயர்ந்துள்ளது. வர்த்தக வாகன விற்பனை 36.54 சதவீதம் அதிகரித்து 9,903லிருந்து 13,522 ஆக உயர்ந்துள்ளது.எனினும், இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மூன்று சக்கர வான விற்பனை 10.72 சதவீதம் சரிவடைந்து 5,725லிருந்து 5,111 ஆக குறைந்துள்ளது.டொயோட்டா கிர்லோஸ்கர்டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் கார் விற்பனை, சென்ற பிப்ரவரியில் 79 சதவீதம் அதிகரித்து 16,659 ஆக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே மாதத்தில் 9,308 ஆக இருந்தது."எடியோஸ்', "லிவா' கார்களின் விற்பனை உயர்ந்ததையடுத்து, ஒட்டு மொத்த கார் விற்பனை அதிகரித்துள்ளதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் (சந்தைப்படுத்துதல்) சந்தீப் சிங் தெரிவித்துள்ளார்.சென்ற மாதம், இந்நிறுவனம் 4,590 "எடியோஸ்' மற்றும் 3,437 "லிவா' கார்களை விற்பனை செய்துள்ளது. மேலும் புதிய மேம்படுத்தப்பட்ட "இன்னோவா', "பார்ச்சூனர்', "கொரோலா ஆல்டிஸ்' ஆகியவற்றின் விற்பனை, முறையே 6,271, 1,346 மற்றும் 996 ஆக உள்ளன.

ஜெனரல் மோட்டார்ஸ்ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், சென்ற பிப்ரவரியில், 8,901 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 4.32 சதவீதம் (9,303 வாகனங்கள்) குறைவாகும்.

சென்ற பிப்ரவரியில், ஸ்பார்க் (1,328) பீட் (4,684) ஏவியோ (90) ஆப்ட்ரா (237) குரூஸ் (537) உள்ளிட்ட கார்கள் விற்பனையாகியுள்ளன. இது தவிர, பன்முக பயன்பாட்டு வாகனமான டவேரா கார் விற்பனை 1,964 ஆகவும், எஸ்.யு.வி. கேப்டிவ் விற்பனை 25 ஆகவும் உள்ளது. பணவீக்கம், வட்டி விகிதம் அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றால் விற்பனை குறைந்துள்ளதாக, இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் பி.பாலேந்திரன் தெரிவித்துள்ளார்.சுசூகி மோட்டார் சைக்கிள்இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும், சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம், சென்ற பிப்ரவரி மாதத்தில் 37 ஆயிரத்து 336 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையைவிட, 29.85 சதவீதம் (28 ஆயிரத்து 754 வாகனங்கள்) அதிகமாகும்.இது குறித்து, இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்) அதுல் குப்தா கூறுகையில், " நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட "ஸ்விஷ் 125' வாகனங்களுக்கு தேவை மிகவும் அதிகரித்து வருகிறது' என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)